2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

யானை வெடி வெடித்ததில் ஒருவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 20 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

காட்டு யானைகளை விரட்டுவதற்காக யானை வெடிகளைத் ஒருவர் தயாரித்துக்கொண்டிருந்தபோது, அவர் தயாரித்த வெடியொன்று தவறுதலாக வெடித்ததில் படுகாயமடைந்துள்ளார்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சித்தாண்டியில் நேற்று செவ்வாய்க்கிழமை பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சித்தாண்டி மாவெடிவேம்பைச் சேர்ந்த விவசாயியான (வயது 42) ஆர்.ராஜரெட்ணம் என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

இவ்வாறு படுகாயமடைந்தவர் உடனடியாக மாவெடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

யானை வெடி வெடித்ததில் இவரின் கைவிரல்கள் 3 துண்டாடப்பட்டுள்ளதோடு, அவரது முகத்திலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .