2025 மே 01, வியாழக்கிழமை

நீதியை நோக்கிய பேரணி

Kogilavani   / 2013 டிசெம்பர் 03 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எம்.முர்ஷித்


'பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிரான நீதியை நோக்கிய பயணம்' எனும் தொனிப் பொருளில்  ஊர்வலம் ஒன்று வாழைச்சேனை பிரதேசத்தில் திங்கட்கிழமை (2) இடம்பெற்றது.

அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் ஊர்வலம் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டு மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதி வழியாக வாழைச்சேனை பொது மைதானத்தை வந்தடைந்தததுடன் எட்டு கோறிக்கைகள் அடங்கிய  மகஜர் ஒன்றும் கோறளைப்பற்று பிரதேச செயலக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.

இப்பேரணியின் போது பெண்கள், வீட்டிலும், வேலை செய்யும் இடங்களிலும், வீதிகளிலும், பஸ்ஸிலும், பாடசாலை செல்லும் போதும், கடைக்குச் செல்லும் போதும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பொது மக்களுக்கு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

ஏற்பாட்டாளர்களால் வன்முறைகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் அணிந்திருந்த ஆடைகளும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .