2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஓடும் ரயிலில் பாய்ந்து ஏறிய இளைஞர் விழுந்து மரணம்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 03 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் பாய்ந்து ஏறிய இளைஞர் ஒருவர் கீழே விழுந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

ஏறாவூர், ஐயன்கேணியைச் சேர்ந்த கலந்தர் தாவூத் அஸீஸ் (வயது 17) என்ற இளைஞரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை இரவு 7.15 மணிக்கு கொழும்பிலிருந்து மட்டக்களப்பை நோக்கிப் புறப்பட்ட ரயிலில்  இந்த இளைஞரும் பயணித்துள்ளார்.

மேற்படி ரயில்  பொல்கஹவெலயில் தரித்து நின்றபோது,  இவர் ரயிலை விட்டிறங்கி இரவு உணவு வாங்குவதற்காக சிற்றுண்டிச்சாலைக்குச் சென்று உணவு வாங்கிக்கொண்டு திரும்பியபோது  ரயில்  நகரத் தொடங்கியுள்ளது.

இவ்வாறு நகரத் தொடங்கிய ரயிலில் இவர் பாய்ந்து ஏறியபோது  கால் தடுக்கி கீழே விழுந்து ரயில் சில்லில் அகப்பட்டுள்ளார்.

இவரது ஒரு கையும் ஒரு காலும் முறிந்த  நிலையில் உடனடியாக  வத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர் அங்கு மரணமடைந்துள்ளதாக  உறவினர்கள் தெரிவித்தனர்.

பொலிஸ் விசாரணைகளைத் தொடர்ந்து  சடலம் ஏறாவூருக்கு கொண்டுவரப்படுவதாகவும் உறவினர்கள் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X