2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பொருட்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 டிசெம்பர் 03 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எம்.முர்ஷிட்


மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனின் 2013ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அமைப்புகளுக்கு   உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பொருட்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன், கணக்காளர் நௌபீக் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
 
இதன்போது, வாழைச்சேனை புதுக்குடியிருப்பு சேக்கிழார் அறநெறிப் பாடசாலை, வாழைச்சேனை பேத்தாழை வீரையடி அறநெறிப் பாடசாலை, வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச முதியோர் சம்மேளனம் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்கம் என்பவற்றுக்கு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X