2025 மே 01, வியாழக்கிழமை

நீரில் மூழ்கி மீனவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 03 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேத்தாழை ஆற்றில்  மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

பேத்தாழை மாரியம்மன் வீதியைச் சேர்ந்த 02 பிள்ளைகளின் தந்தையான தாமோதரம்பிள்ளை அற்புதன் (வயது –43) என்பவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பேத்தாழை துறையடியில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 03 மணியளவில் 03  பேருடன்  ஆற்றில் இறங்கி மீன்பிடித்துக்கொண்டிருந்தபோதே  இவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 03 நாட்களாக  மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் மழையினால் ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .