2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மாற்றுத்திறனாளிகளின் ஊர்வலம்

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 07 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்.களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலய மாணவர்களினால் நேற்று முன்தினம் தினம் (05) மாற்றுத் திறனாளிகள் தினத்தினையொட்டி ஊர்வலமும் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
 
பட்டிருப்புக் கல்வி வலயம் மற்றும் மட்.களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலயம் ஆகியவற்றின் ஏற்பாட்டின் கீழ் இந்நிகழ்வு நடைபெற்றது.
 
விசேட தேவையுடைய மாணவர்களுக்கான ஆசிரிய அலோசகர் திருமதி செல்வநாயகி நடராஜதுரை அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், மாற்றுத் திறனுடைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
 
இந்நிகழ்வின்போது மாற்றுத் திறனுடைய மாணவர்கள், ஏனைய மாணவர்களுடன் இணைந்து மாற்றுத்திறன்கள் பற்றி விழிப்புணர்வுகளை எற்படுத்தக்கூடிய வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மட்.களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலத்திலிருந்து மட்.களுவாஞ்சிகுடி விநாயகர் வித்தியாலயம் வரை ஊர்வலமாகச் சென்றனர்.
 
பின்னர் மாற்றுத்திறனுடைய மாணவர்கள், ஏனைய மாணவர்களுடன் இணைந்து கலை நிகழ்வுகளிலும் ஈடுபட்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X