2025 மே 01, வியாழக்கிழமை

மட்டு. விவசாயிகள் மாநாடும் சம்மேளனத் தெரிவும்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 09 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}



-ரி.எல்.ஜவ்பர்கான்,  வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் மாநாடும் சம்மேளன தெரிவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08)  காலை மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் மாநாடும் சம்மேளன தெரிவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது. 

கமநல சேவைகள் அமைச்சின் அனுசரணையுடன் நடைபெற்ற இம்மாநாட்டில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 17 கமநல சேவை  பிரிவுகளைச் சேர்ந்த விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் பெருமளவில்  கலந்து கொண்டனர்.

இதன்போது விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டதுடன், விவசாய சம்மேளனத் தெரிவும் இடம்பெற்றது.

இந்த மாநாட்டில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் கே.சிவலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .