2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

காலநிலை சீர்கேட்டால் மட்டு. மீனவர்கள் வாவி மீன்பிடியில் நாட்டம்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 09 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தையடுத்து கடற்றொழில் நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கடற்கொந்தளிப்பினால் கடலுக்குச்செல்ல முடியாத மீனவர்கள் தமது ஜீவனோபாயத்தை தேடிக்கொள்ள வாவி மீன்பிடியில் அதிக நாட்டம் காட்டி வருவதை அவதானிக்க முடிகின்றது.

இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியில் அதிகமான மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். ஓட்டி, ஓரா, கெழுத்தி, மணலை, செத்தல், சூடை, கிளக்கன், கோள்டன் உட்பட பல வகையான மீன்கள் மட்டக்களப்பு வாவியில் அதிகமான பிடிக்கப்படுகின்றன.

வாவி மூலமாகவும் தூண்டில் மற்றும் வாவியினுள் இறங்கியும் மீனவர்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றமை; குறிப்பிடத்தக்கது. இம்மாவட்டத்தில் 23 ஆயிரம் முழுநேர மீனவர்கள் உள்ளதும் மாவட்டத்தில் இரண்டாவது வருமானத்தை ஈட்டித்தரும் தொழில் மீன்பிடி என்பதும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X