2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மட்டு. விவசாயிகள் மாநாடும் சம்மேளன தெரிவும்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 09 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் மாநாடும் சம்மேளன தெரிவும் இன்று காலை மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.

கமநல சேவைகள் அமைச்சின் அனுசரணையுடன் நடைபெற்ற இம்மாநாட்டில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 17 கமநல சேவை பிரிவுகளையும் சேர்ந்த விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் பெருமளவில் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட நமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் கே.சிவலிங்கம் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட இம்மாநாட்டில் விவாயிகளின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டன. விவசாய சம்மேளனமும் தெரிவு செய்யப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X