2025 மே 01, வியாழக்கிழமை

கமநல அபிவிருத்தி விவசாயிகளின் மாநாடு

Kogilavani   / 2013 டிசெம்பர் 09 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி விவசாயிகளின் இவ்வாண்டுக்கான  மாநாடு நேற்று (08) மட்டக்களப்பு மாநகர சபை கேட்போர் கூடத்தில்; நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி பிரதிப் பணிப்பாளர் எஸ்.சிவலிங்கம்; தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ், மற்றும் மாவட்டத்திலுள்ள 14
பிரதேச விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட விவசாய செயற்குழுவுக்கு 14 நபர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அடுத்து வரும் செயற்குழு கூட்டத்தில் மாவட்ட விவசாய சங்கத்திற்குரிய நிர்வாகிகள் தெரிவு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்மாநாட்டின்போது மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து ஆராயப்பட்டன.

இதன்போது கருத்து தெரிவித்த மீள்குடியேற்றப் பிரதியமைசர் விநாயகமூர்த்;தி முரளிதரன்,
2014 ஆம் அண்டு வரவு செலவுத் திடத்தில் விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மானியவிலையில் உரம், களஞ்சியவசதி போன்ற பல நலத் திட்டங்களை ஜனாதிபதி; அறிவித்துள்ளார்.

ஜனாதிபதிகூட ஒரு விவசாயிதான். அதனைக் கருத்திற்கொண்டே வேறு எந்த ஒரு அரசாங்கமும் வழங்காத பல சலுகைகளை இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

இந்த வரவு செலவத் திட்டத்தின் மூலம் மக்களின் வாழ்க்கைத்தரம் நிச்சயம் முன்னேற்றமடையும் என அவர் இதன்போது தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .