2025 ஜூலை 30, புதன்கிழமை

ஐம்பத்திமூன்று குடும்பங்களுக்கு மண்ணெண்ணெய் அடுப்புக்கள்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 24 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட காங்கேயனோடை பிரதேசத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள  53  குடும்பங்களுக்கு மண்ணெண்ணெய் அடுப்புகள் நேற்று திங்கட்கிழமை  வழங்கப்பட்டுள்ளன.

காங்கேயனோடை மீஸான் நிறுவனத்தின் ஏற்பாட்டில்;, முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் தற்போதைய உற்பத்தி ஊக்குவிப்பு அமைச்சின் மக்கள் தொடர்பாடல் அதிகாரியுமான யூ.எல்.எம்.என்.முபீனினால் 'உழைப்போம் உயர்வோம் வாழ்வாதார உதவி வழங்கும் வேலைத்திட்டம்' மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள  53  குடும்பங்களுக்கு மண்ணெண்ணெய் அடுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மீஸான் நிறுவனத்தின் தலைவர் எம்.எம்.எம்.நளீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உற்பத்தி ஊக்குவிப்பு அமைச்சின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி யூ.எல்.எம்.என்.முபீன், மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற ஒன்றியத்தின் தலைவர் வி.கமலதாஸ், காத்தான்குடி நகரசபை உறுப்பினரும் பெண்களுக்கும் வழுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியுமான சல்மா அமீர் ஹம்ஸா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .