2025 ஜூலை 30, புதன்கிழமை

கிழக்கில் கராத்தே அலுவலகம் திறப்பு

Kogilavani   / 2013 டிசெம்பர் 30 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரி.எல்.ஜவ்பர்கான்

கிழக்கு மாகாணத்தில் தற்காப்பு கலையான கராத்தே கலையை வளர்ப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கான பணிகளை இலங்கை கராத்தே சம்மேளனம் மேற்கொண்டு வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கராத்;தே கலையை அபிவிருத்தி செய்யவென நிரந்தர அலுகமொன்றை ஜனாதிபதியின்
ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் நேற்று திறந்து வைத்தார்.

மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள இவ் அலுவலகத்தினூடாக இப்பிராந்தியத்தில் கராத்தே கலை முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

மண்முனை மேற்கு வலய கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது, மாணவர்களுக்கான கராத்தே பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .