2025 ஜூலை 30, புதன்கிழமை

வெள்ள நீரை தடுக்க மட்டக்களப்பில் வடிகான்கள் நிர்மாணம்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 30 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மழைக் காலங்களில் வீதிகள், அலுவலகங்கள் மற்றும் வதிவிடங்களில் தேங்கும் நீரினால் வெள்ளம் ஏற்படுவதை தடைசெய்யும் முகமாக மட்டக்களப்பு நகரில் வடிகான்கள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நகரின் கேந்திர முக்கியத்துவம் பெற்ற இடங்களான மாநகரசபை, பிரதேச செயலகம், சமுர்த்தி வங்கி, பாடசாலைகள் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள வீதிகளின் அருகில்; வடிகான் கட்டமைப்பு பணிகள் நடைபெற்றன.

வதிவிடங்களில் தேங்கும் வெள்ள நீரை குடியிருப்பாளர்கள் தங்களது எல்லைச் சுவர்களை உடைத்து நீரை வீதியில் விடுவதனால் வீதிகள் சேதமடைகின்றன.

ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள வடிகான்களில் சில இடங்களில் நீர் சீராக ஓடாமல் இருப்பது பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்துவதோடு மடடுமல்லாமல் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .