2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய பழைய மாணவர்களின் ஒன்றுகூடல்

Super User   / 2014 ஜனவரி 07 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் எதிர்வரும் ஜனவரி 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் அதிபர் எஸ்.ரவிராஜ் தலைமையில் நடைபெறவுள்ளது என பழைய மாணவர் சங்க செயலாளர் க.கேசகப்போடி தெரிவித்தார்.

அம்பிளாந்துறை கலைமகள் மகாவித்தியாலயம் 1AB தரப் பாடசாலையாக தரமுயர்த்தப்பட்ட பின்னர், பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்றுகூடி பாடசாலையின் அபிவிருத்தி பற்றிய கருத்துக்கள் இந்த ஒன்றுகூடலில் முன்வைக்கப்படவுள்ளன.

பாடசாலையில் கல்வி பயின்ற அனைத்து பழயை மாணவர்களையும் தவறாது இந்த ஒன்றுகூடலில் கலந்துகொள்ளுமாறு பாடசாலையின் பழைய மாணவர் சங்கச் செயலாளர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் பாடசாலையின் அபிவிருத்தியினை முன்நோக்கிச் செல்வது, பழைய மாணவர்ளின் ஒத்துழைப்புக்களை உள்வாங்குவது போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X