2025 மே 01, வியாழக்கிழமை

'நாட்டை ஆசீர்வதிக்கும் ஆலயங்களை கட்டி வருகின்றோம்'

Kogilavani   / 2014 ஜனவரி 24 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

'நாங்கள் இப்போது நினைவாலயங்களை நிறுவுவதை நிறுத்தி நாட்டை ஆசீர்வதிக்கும் ஆலயங்களை கட்டி வருகின்றோம். இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை நோகவைக்க நாம் விரும்பவில்லை. ஆனால் மொழி ஒரு தடையாக உள்ளது என வ.கமலதாஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் சுற்றுலா வீடுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற பாதுகாப்புச் செயலாளருக்கும் கிழக்கு மாகாண சமய, சமூக நிறுவனப் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட இந்து ஆலயங்களின் சார்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து  தெரிவித்த அவர்,

'முப்பது வருடங்கள் தாங்கமுடியாத துன்பத்துக்குள் வாழ்ந்த மட்டக்களப்பு மக்களுக்கு சாதாரண மனித வாழ்க்கை வாழக் கூடியவாறு சமாதானமான இயல்பு நிலையை ஏற்படுத்தித் தந்தமைக்காக அதிமேதகு ஜனாதிபதிக்கு  நன்றியை தெரிவிக்க விரும்புகின்றோம்.

2008 ஆம் ஆண்டிலிருந்து மட்டக்களப்பு வாழ் மக்கள் வன்முறையற்ற ஜனநாயக சூழலை அனுபவித்து வருகின்றோம். ஆயிரம் குடும்பங்கள் தத்தம் சொந்த இடங்களுக்கு திரும்பி மீள்குடியேறிவிட்டனர்.

ஜனாதிபதியின் தலைமைத்துவத்திற்காக தலை வணங்குகின்றோம். அவருடைய உயர்ந்த சிந்தனைகளுக்கு இசைவாக கீழ்நிலை அதிகாரிகளும் ஏழை மக்கள் சார்பாக தங்களது மனப்பான்மைகளை மாற்றிக்கொண்டார்களானால் பெருமளவு மக்கள் இங்கு திருப்தியடைவார்கள்.

இந்துக்களைப் பொறுத்தவரையில் நாம் ஒருபோதும் வன்முறை வழிகளை அங்கீகரித்ததில்லை. எதிர்காலத்திலும் அது எமக்கு வேண்டாம். இறந்தவர்களுக்காக பழிவாங்கும் எண்ணமும் எம்மிடம் இல்லை. உயிருடன் உள்ளவர்கள் நிம்மதியாக வாழ்ந்தால் போதும்.

மட்டக்களப்பில் அநேகமான மக்கள் அமைதியையும் அபிவிருத்தியையும் தந்தமைக்காக அரசுக்கு நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்க விரும்புகின்றனர். மண்முனை, வலையிறவுப் பாலங்கள் மக்களை ஒன்றிணைப்பதற்கான ஒரு பெரும் பங்களிப்பு. எங்கிலும் மின்சாரம் வந்துவிட்டது.. புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர்கள் தங்கள் குடும்பங்களுடன் மீள் இணைந்து வருகின்றனர்.

நாங்கள் இப்போது நினைவாலயங்களை நிறுவுவதை நிறுத்தி நாட்டை ஆசீர்வதிக்கும் ஆலயங்களை கட்டி வருகின்றோம். இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை நோகவைக்க நாம் விரும்பவில்லை. உண்மையில் அவர்களுடன் ஒரே தர்மத்தையும், கலாசாரத்தையும் பகிர்ந்துகொள்கின்ற காரணத்தால் அவர்களுடன் வாழ்வது எமக்கு இலகுவாகவுள்ளது. ஆனால் மொழிதான் தடையாகவுள்ளது.

அரசு முன்னெடுக்கும் தார்மீக ரீதியான சமாதான நல்லிணக்க முயற்சிகளுக்கு வலுவூட்டுவதற்கான முழு ஆதரவையும் நாம் வழங்குவோம். எந்த தரப்பாகவிருந்தாலும் சரி, மதமாக விருந்தாலும் சரி  அவர்களது பயத்தையும் சந்தேகத்தையும் நீக்க நாங்கள் முயற்சி செய்வோம்'  என்று தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0

  • l Sunday, 26 January 2014 08:05 AM

    என்ன சொல்லவாரீங்க...?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .