2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்பாளராக சிவகீர்த்தா நியமனம்

Super User   / 2014 ஜனவரி 26 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் மட்டக்களப்பு தொகுதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்குரிய இணைப்பாளராக முன்னாள் மட்டக்களப்பு மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் கடந்த சனிக்கிழமை முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பிரான சிவகீர்த்தா, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் ஸ்தாபக செயலாளராவார்.
மட்டக்களப்பு மாநகர சபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு மேயராக தெரிவு செய்யப்பட்டார்.

பின்னர் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுடன் இணைந்து கொண்டார். பின்னர் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்துகொண்ட சிவகீர்த்த பிரபாகரன், பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் மட்டக்களப்பு தொகுதியின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்குரிய இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் படுகொலை செய்யப்பட்ட மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் முன்னாள் தலைவர் இராஜன் சத்தியமூர்த்தியின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • Iya Sunday, 26 January 2014 11:23 AM

    இருவரும் ஒரே குணாம்சத்தைக்கொண்டவர்கள். எதுதான் செய்தாலும் எதிர்வரும் தேர்தல்களில் இவர்கள் தோல்வியைத்தழுவது நிச்சயம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X