2025 மே 01, வியாழக்கிழமை

'கடலில் மூழ்கியவர்கள் தொடர்ந்து தேடப்படுகின்றனர்'

Super User   / 2014 ஜனவரி 27 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, பனிச்சையடிக் கடலில் நேற்று மாலை ஐந்து மணியளவில் நீராடிக் கொண்டிருந்தபோது காணாமல் போன மூன்று இளைஞர்களும் தொடர்ந்து தேடப்பட்டு வருவதாக மட்டக்களப்பு  பொலிஸார் தெரிவித்தனர்.

தேடும் பணியில் மீனவர்களும் கடற் படையினரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்றும் பொலிஸார் கூறினர்.
ஏழு பேர் கடலில் குளித்துக் கொண்டிருந்த சமயம் நான்கு பேர் கரைசேர்ந்துள்ளனர்.

எனினும் தங்களுடன் கூடவே கடலில் குளித்துக் கொண்டிருந்த மூன்று இளைஞர்களும் கடலலையால் அள்ளுண்டு கொண்டு செல்லப்பட்டதாக தப்பி வந்தவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .