2025 மே 01, வியாழக்கிழமை

பலசரக்கு கடைகளில் மருந்துப்பொருட்கள் விற்கத்தடை

Kanagaraj   / 2014 ஜனவரி 29 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள பலசரக்கு விற்பனை நிலையங்களில் பெனடோல் மற்றும் பெரசிட்டமோல் வில்லைகளை(குளிசைகள்)தவிர வேறெந்த மருந்துப் பொருட்களும் விற்பணை செய்யக் கூடாது என காத்தான்குடி நகர சபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நகர சபை உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீர் இது தொடர்பிலான வாய்மொழி மூலமான பிரேரணை ஒன்றை சபையில் மும்மொழிந்ததையடுத்து சபை அதை ஏற்றுக் கொண்டது.

காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள பலசரக்கு விற்பணை நிலையங்களில் பாமசிகளில்(மருந்துக் கடைகளில்) விற்பணை செய்யப்படும் சில மருந்துப் பொருட்கள் விற்கப்படுவதாகவும் அதை மக்கள் வைத்தியர்களின் ஆலோசனை இன்றி வாங்கி பாவிப்பதாகவும் இதனால் பக்க விளைவுகள் எற்படுவதாகவும் நகர சபை உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீர் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள பலசரக்கு விற்பணை நிலையங்களில் பெனடோல் மற்றும் பெரசிட்டமோல் வில்லைகளை(குளிசைகள்)தவிர வேறெந்த மருந்துப் பொருட்களும் விற்பணை செய்யக் கூடாது எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் இது தொடர்பில் காத்தான்குடி சுகாதார வைத்திய அலுவலகத்திற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவிப்பதுடன் சகல பல சரக்கு விற்பனை நிலையங்களுக்கும் அறிவிப்பதெனவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .