2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

வடக்கு கிழக்கு மக்களுக்கு இராணும் உதவிகளை வழங்கி வருகிறது: குணரத்தின வீரகோன்

Kogilavani   / 2014 பெப்ரவரி 04 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

'வடக்கு கிழக்கில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் அப்பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அரசாங்கத்திற்கு வேண்டுகோளை விடுத்து வருகின்றார். ஆனால் இராணுவமோ அப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது' என்று மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்தின வீரக்கோன் திங்கட்கிழமை (3) தெரிவித்தார்.

வாகரை பிரதேசம் புனானை கிழக்கில் பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.இராகுலநாயகி தலைமையில் இடம்பெற்ற மீள்குடியேற்ற நிகழ்வின்போது பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'எமது அமைச்சினால்; 3 இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகளை கட்டுவதற்கு நிதி உதவி; வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சம்பூர் போன்ற இடங்களில் இராணுவத்தினர் 10 இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகளைக் கட்டிக் கொடுத்து மக்களுக்கான உதவிகளை செய்து வருகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை ஒன்றினைந்து மக்களுக்காக வேலை செய்வோம் வாருங்கள் என்று  அழைப்பு விடுத்திருந்தேன. ஆனால் அதற்கு அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஜனாதிபதி எனக்கு மீள்குடியேற்ற அமைச்சுப் பதவி வழங்கும் போது விநாயகமூர்த்தி முரளிதரனை பிரதி அமைச்சராக நியமித்தார்.

அதற்காக ஜனாதிபதிக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். ஏனெனில் விநாயகமூர்த்தி முரளிதரன்  வடக்கு கிழக்கைப் பற்றி நன்கு அறிந்தவர். அதனாலேயே அவரிடம் இப்பகுதிகளுக்கான முக்கிய பணிகளை ஒப்படைத்துள்ளேன். இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் 4000 வீடுகள் அமைப்பதற்கான வேலைத்திட்டம் யாவும் இவரிடமே ஒப்படைத்துள்ளேன்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X