2025 மே 02, வெள்ளிக்கிழமை

செயலமர்வு

Kogilavani   / 2014 பெப்ரவரி 07 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


ஆசிய மன்றத்தினால் ஐந்து மாகாணங்களில் உள்ளுராட்சி மன்றங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார ஆளுகை நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் எதிர்கால நிகழ்ச்சித் திட்டங்களை தயார் செய்துகொள்ளும் மூன்று நாள் செயலமர்வு மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் வியாழக்கிழமை(6) மாலை ஆரம்பமானது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் இந்த செயலமர்வினை ஆரம்பித்து வைத்தார்.

இச்செயலமர்வின் ஆரம்ப வைபவத்தில் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் டபிள்யு.எம்.பி.யு.விக்ரமசிங்க, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம், ஆசிய மன்றத்தின் பணிப்பாளர் கலாநிதி ரி.கோபு குமார் தம்பி, அதன் பிரதிப்பணிப்பாளர் ஏ.சுபாகரன், வடமகாண முதலமைச்சின் செயலாளர் எஸ்.திருநாவுக்கரசு, தென்மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் திருமதி திலேகா குடாச்சி, மத்திய மாகாண முதலமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் ஏ.குமார கமகே உட்பட வடக்கு மற்றும் கிழக்கு தென், ஊவா, மத்தி ஆகிய மாகாணங்களிலுள்ள மாவட்டங்களின் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், மட்டக்களப்பு மற்றும் கல்முனை, அக்கரைப்பற்று ஆகிய மாநகர சபைகளின் ஆணையாளர்கள் ஆசிய மன்றத்தின் பொருளாதார ஆளுகை நிகழ்ச்சித் திட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இச்செயலமர்வில் உள்ளூராட்சி மன்றங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதுடன் எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும் தயார் செய்யப்படவுள்ளதாக ஆசிய மன்ற அதிகாரி எம்.வலீத் தெரிவித்தார்.

இச்செயலமர்வு சனிக்கிழமை (8) பிற்பகலுடன் நிறைவு பெறவுள்ளது.

ஆசிய மன்றம் இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு தென், ஊவா, மத்தி ஆகிய 5 மாகாணங்களில் இந்த பொருளாதார ஆளுகை நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .