2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

குடும்ப வருமானத்தை அதிகரித்தால் மாத்திரமே வறுமையை ஒழிக்கமுடியும்: ஹிஸ்புல்லாஹ்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 10 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


குடும்ப வருமானத்தை அதிகரித்தால் மாத்திரமே வறுமையை  ஒழிக்கமுடியுமென பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

கிராம மட்ட அபிவிருத்தி தொடர்பாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில்; காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலயத்தில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர்  மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

'வீதிகளை அபிவிருத்தி செய்வதால் மாத்திரம் மக்களின் வறுமையை போக்கமுடியாது. குடும்ப வருமானத்தை அதிகரித்தால் மாத்திரமே வறுமையை ஒழிக்கமுடியும்.

இதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு இந்த வருடத்தில்  பௌதீக அபிவிருத்தியையும் வாழ்வாதார அபிவிருத்தியையும் மேற்கொள்ளவுள்ளது.  இந்த நிலையில் மக்களின் தேவைகள், அவர்களுக்கான திட்டங்கள், வாழ்வதார அபிவிருத்தித் திட்டங்கள், பௌதீக அபிவிருத்தித் திட்டங்கள் ஆகியவை கேட்டறியப்படுகின்றன.

மக்களிடம் பெறும் திட்டங்களை உள்வாங்கி அவற்றைக் கொண்டு எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி  திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம். இதற்கு  மக்கள் ஒத்துழைக்க வேண்டுமென்பதுடன்,  தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்க வேண்டும்' என்றார்.

காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்,  காத்தான்குடி நகரசபை முதல்வர் எஸ்.எச்.அஸ்பர், பிரதி தலைவர் எம்ஐ.எம்.ஜெஸீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X