2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கல்குடா வலயத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பான கூட்டம்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 14 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டு. கல்குடா வலயத்தின் விசேட கல்வி அபிவிருத்தி தொடர்பான கூட்டம் கல்குடா வலயக் கல்விப் பணிமனையில் வியாழக்கிழமை (13) நடைபெற்றது.

மிக நீண்டகாலமாகவுள்ள  ஆசிரியர்கள்  பற்றாக்குறை, ஒழுங்கமைப்பு, புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதும் பின்னர் அவர்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்படுவது, தற்காலிக இடமாற்றம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டன.

கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ள.புஸ்பகுமார, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.நிஸாம், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X