2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

தமிழர்களின் கல்வியை வளர்க்க அனைவரும் பங்காளிகளாக வேண்டும்: முரளிதரன்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 14 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் கல்வி பின்னோக்கிச் செல்கின்ற நிலையில், ஏனைய சமூகங்களைப் போன்று கல்வியை போட்டி போட்டு வளர்ப்பதற்கு தமது சமூகத்தைச் சேர்ந்த அனைவரும் பங்காளிகளாக மாறவேண்டுமென மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

களுதாவளை இராமகிருஷ்;ண வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'பெற்றோர்கள்  பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காரணம் பிள்ளைகள் பாடசாலையை விட பெற்றோர்களுடன்தான் கூடுதல் நேரத்தைக் கழிக்கின்றனர். பெற்றோர்களும் ஆசிரியர்களும் சேர்ந்தால்தான் பிள்ளைகளின்  கல்வியை கட்டியெழுப்ப முடியும்.
அன்பான மாணவர்களே! எவ்வேளையிலும்; கற்பித்த ஆசிரியரை மறக்கக்கூடாது. அவ்வாறு மறந்தால் உங்கள் வாழ்க்கை நிச்சயமாக பின்னோக்கிச் செல்லும். ஆசிரியர்கள் மனம் வைத்தால் மாத்திரமே, எதிர்காலத்தில் நீங்கள்; தலைநிமிர முடியுமென்பதை  மறக்கக்கூடாது. ஏற்றி வைக்கின்றவர்களை எவர் மறக்கின்றனரோ அவர் நிச்சயம் இறக்கப்படுவார்.

மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மதிப்பளித்து எக்காலத்திலும் மறக்காமலிருப்பதால்,  நீங்கள் வெற்றி பெறுவீர்களென்பதை நான் உங்களுக்கு அறிவுரையாக கூறுகிறேன்.

இக்களுதாவளைக் கிராமம் எதிர்காலத்தில் கல்வியில் வீறுநடைபோடும் பலமான கிராமமாக மாறும். காரணம் களுதாவளை மகா வித்தியாலயம் தொழில்நுட்பப் பாடசாலையாக மாற்றப்பட்டுள்ளது' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X