2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஏறாவூர் நகரில் கைக்குண்டு மீட்பு

Kogilavani   / 2014 பெப்ரவரி 17 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் நகரில் கைக்குண்டொன்று ஞாயிற்றுக்கிழமை இரவு (16) மீட்கப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

அந்நகரிலுள்ள புடைவைக் கடையொன்றுக்கு பின்னாலிருந்து இக்கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

புடவைக் கடைக்காரர்கள் அந்தப் பகுதியைத் துப்புரவு செய்து கொண்டிருந்த போது இந்த கைக்குண்டைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்ததாக பொலிஸார் கூறினர்.

நீதிபதியின் கட்டளையின் பிரகாரம் மட்டக்களப்பிலுள்ள இராணுவ குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு இந்த கைக்குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X