2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

புதிய காத்தான்குடி மகளீர் அமைப்பை புனரமைக்கும் கூட்டம்

Kogilavani   / 2014 பெப்ரவரி 18 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மகளிர் விவகார ஸ்தாபனத்தின் மகளிர் அமைப்புக்களை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் புதிய காத்தான்குடி முதலாம் குறிச்சி கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள மகளிர்அமைப்பை புனரமைக்கும் கூட்டம் காத்தான்குடியிலிலுள்ள இப்ராஹிமியா குர்ஆன் மண்டபத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்றது.

இதில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச்.யு.றஸ்மினா பேகம், நிவாரணங்களுக்கு பொறுப்பான திருமதி எச்.பி.யு.சில்மி தாஜுதீன், கிராம உத்தியோகத்தர் வை.எல்.எம்.இப்றாகீம், பிரிவு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சுல்பிகார் உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது மகளிர் அமைப்பு நிர்வாகிகளும் தெரிவு செய்யப்பட்டனர். காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 7 மகளிர் அமைப்புக்கள் இதுவரை புனரமைக்கப்பட்டுள்ளதாக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச்.யு.றஸ்மினா பேகம் இதன்போது தெரிவித்தார்.
மகளிர் விவகார அமைச்சின் கீழ் இயங்கும் மகளிர் விவகார ஸ்த்தாபனத்தின் மகளிர் அமைப்புக்கள் காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் புனரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மிலின் வழிகாட்டலில் இந்த மகளிர் அமைப்புக்கள் காத்தான்குடி பிரதேச செயலக மகளிர் உத்தியோகத்தர்களினால் புனரமைக்கப்பட்டு வருகின்றன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X