2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஏறாவூரை இயற்கை இடர்களிலிருந்து பாதுகாக்கும் நிகழ்ச்சித் திட்டம்

Super User   / 2014 பெப்ரவரி 18 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எச்.ஏ. ஹுஸைன்


ஏறாவூர் நகரை இயற்கை இடர்களுக்கு தாக்குப் பிடிக்கக் கூடிய நகராக பாதுகாக்கும் திட்டத்தின் வரைவை கையளிக்கும் செயலமர்வு இன்று இடம்பெற்றது.

வருடா வருடம் ஏறாவூர் நகரத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் ஏற்படக்கூடிய பெரு வெள்ளம் மற்றும் இதர சூழல் பாதிப்புக்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் ஏறாவூர் நகரைத் திட்டமிடும் தொடர் செயலமர்வின் இறுதிக் கட்டம் ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியில் இடம்பெற்றது.

ஏறாவூர் நகர சபை, பிரதேச செயலகம், மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியன இணைந்து ஏறாவூர் நகரை இடர்களுக்கு தாக்குப் பிடிக்கும் ஒரு நகராக திட்டமிடும் செயலமர்வின் இறுதிக்கட்டத்தை இன்று பூர்த்தி செய்துள்ளன.

ஏறாவூர் நகர பிதாவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அலிஸாஹிர் மௌலானா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரக்டிகல் ஏக்ஸன் நிறுவனத்தின் ஆலோசகர் நிலந்த குமார, இடர் முகாமைத்துவ நிலைய மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ். இன்பராஜன், ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்தத் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியம், பிரக்டிகல் அக்ஸன், கிறிஸ்தியன் எயிட், இடர் முகாமைத்துவ நிலையம் உட்பட இன்னும் நிறுவனங்கள் உதவுகின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X