2025 மே 03, சனிக்கிழமை

மாநாட்டை ஹிஸ்புல்லாஹ் அரங்கில் நடத்த அனுமதி மறுப்பு

Kogilavani   / 2014 மார்ச் 02 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தேசிய மாநாட்ட காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை அறிவித்துள்ளது.

இதனால், இம்மாநாடு காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மக்கள் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (2) நடைபெற்றதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்தனர்.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை (ஆலொசனை சபை) தலைவர் அஸ்ஸெய்ஹ் எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் வட மாகாண சபை உறுப்பினர் அஸ்ஸெய்ஹ அஸ்மின் ஐயூப் நழீமி, மற்றும் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மான் காத்தான்குடி ஐம் இய்யத்துல் உலமா சபை தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி உட்பட கட்சியின் சூறா சபை உறுப்பினர்கள், முக்கியஸ்த்தர்கள் பிரமுகர்கள உட்பட ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X