2025 மே 03, சனிக்கிழமை

ஏறாவூரில் அறபுக் கல்லூரி, பல்கலைக்கழகம் நிர்மாணம்

Menaka Mookandi   / 2014 மார்ச் 05 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


ஏறாவூரில் அறபுக் கல்லூரியும் பல்கலைக்கழகமும் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, காட்டுப்பள்ளி வீதியில் அமைந்துள்ள குல்லியத்துதாறில் உலூம் அறபுக் கல்ல}ரியில் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்றது.

மாகாண அமைச்சர் நஸீர் அஹமட்டின் இணைப்பாளர் யூ.எல்.முஹைதீன்பாவா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி சுற்றுலாத்துறை அமைச்சர் நஸீர் அஹமட் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். அத்துடன், அறபு நாட்டு நன்கொடையாளர்களான அப்துல் றப் அல் ஈஸாயி தலைமையிலான ஐவரடங்கிய குழுவினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சுமார் 16 கோடி ரூபா மதிப்பீடு கொண்டதாக இந்த அறபுக் கல்லூரியும் உத்தேச பல்கலைக்கழகத்துக்குமான இந்த நிர்மாணப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்படுவதாக அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இந்த உத்தேச சர்வதேச அறபுப் பல்கலைக்கழகத்துக்கான இடம் சுமார் நூறு ஏக்கர் விஸ்தீரணத்தில் அமையும் என்றும் அதற்கான முன்னோடி நடவடிக்கைகளைத் தாம் ஆரம்பித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

அறபுக் கல்லூரியின் நிர்மாணப் பணிகளுக்காக அமைச்சர் நஸீர் அஹமட் தனது சொந்த நிதியிலிருந்து 50 இலட்ச ரூபாவை ஒதுக்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X