2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உபகரணங்கள் கையளிப்பு

Kogilavani   / 2014 மார்ச் 07 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை பற்று பிரதேச செயலாளர் பிரிவின் ஒள்ளிக்குளம் கிராமத்திலுள்ள சில குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உபகரணங்கள் வியாழக்கிழமை (6) வழங்கப்பட்டன.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக்கின் மாகாண சபை நிதியொதுக்கீட்டின் கீழ் இந்த வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இவ் வைபவம் ஒள்ளிக்குளம் அல் ஹம்றா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் மற்றும் மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன், மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் பி.குணரட்னம் உட்பட அதிகாரிகள் சமுர்த்தி முகாமயாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயணாளிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது 3பேருக்கு தையல் இயந்திரங்களும், 8 பேருக்கு பண்புல் பாய் பின்னும் இயந்திரங்களும் மற்றும் உபகரணங்களும், ஒருவருக்கு மா அரைக்கும் இயந்திரமும், மற்றுமொருவருக்கு நொறுக்கு தீன் உற்பத்தி செய்யும் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

இரண்டு இலட்சத்து இருபதாயிரம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உபகரணங்கள் 13 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

அத்தோடு அவரின் நிதியிலிருந்து ஒள்ளிக்குளம் உள் வீதி யொன்றுக்கு 190,000 ரூபா செலவில் மின் இணைப்பும் பெற்றுக் கொடுக்கப்பட்டு உத்தியோக பூர்வமாக இதன் போது ஆரம்பித்து வைக்கப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X