2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 07 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்
, க.ருத்திரன்

கடந்த 03  மாதங்களாக தங்களுக்கு சம்பளம் வழங்கப்படாமையைக் கண்டித்து வாழைச்சேனை கடதாசி ஆலையின் ஊழியர்கள் வெள்ளிக்கிழமை (07) ஆர்ப்பாட்டப் பேரணியில்  ஈடுபட்டனர்.

வாழைச்சேனை கடதாசி ஆலையிலிருந்து பேரணியாகச் சென்ற இவர்கள்,   ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளரிடம் மகஜரொன்றைக் கையளித்தனர்.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளருக்கான மகஜரை ஓட்டமாவடி பிரதேச செயலாளரிடம் இவர்கள்  கையளித்தனர்.

இது இந்நாட்டு அரசாங்கத்திற்கோ, ஜனாதிபதிக்கோ எதிரான போராட்டமல்ல. இது எங்களது கடதாசி ஆலையிலுள்ள பொருட்களை விற்று தற்போது கடதாசி ஆலைக்கான காணிகளையும் விற்பதற்கு நடவடிக்கை எடுத்துவரும் ஆலையின் தவிசாளருக்கு எதிரான போராட்டமாகும். இந்த ஆலையிலிருந்து ஆலையின் தவிசாளர் வெளியேறும்வரை இப்போராட்டம் தொடருமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

எங்களது சம்பள நிலுவை கிடைக்காவிட்டால் சாகும்வரையான உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படுமெனவும்; அவர்கள் கூறினர்.

ஆர்ப்பாட்ட முடிவில் ஓட்டமாவடி பாலத்திற்கு அருகில் கடதாசி ஆலை தவிசாளரின்  கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.

மேலும், அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'எங்களது தொழில்ச்; சங்கங்கள்  19.02.2014 அன்று  அரச வளங்கள் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் தயாசிறி திசேரா மற்றும் அமைச்சின் செயலாளரை சந்தித்து எங்களது சம்பளப் பிரச்சினை தொடர்பாக கதைத்தது. இதன்போது,  மார்ச் மாதம் 05ஆம் திகதிக்குள் எங்களது சம்பளப் பிரச்சினை தொடர்பாக சாதகமான தீர்வைப் பெற்றுத் தருவதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால், அத்திகதி கடந்த நிலையிலும் எங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் எங்களுக்கான சம்பள நிலுவையை உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி பெற்றுத்தர வேண்டும்' தெரிவிக்கப்பட்டுள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X