2025 மே 03, சனிக்கிழமை

சிறுவர்கள் பெண்கள் மற்றும் முதியோர் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு

Kogilavani   / 2014 மார்ச் 07 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


சிறுவர்கள் பெண்கள் மற்றும் முதியோர் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு வியாழக்கிழமை (6) ஏறாவூர்ப்பற்று செங்கலடிப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் ஆணையாளர் யமுனா பெரேரா, உதவி ஆணையாளர் நிர்மலி குமாரகே, மாவட்ட உதவிச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், ஏறாவூர்பற்று உதவிப் பிரதேச செயலாளர் ஜீ.நவரூபரஞ்சனி உட்பட சிறுவர் நன்னடத்தைத் திணைக்கள அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சிறுவர்கள் பெண்கள் மற்றும் முதியோர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய வகையில் ஆக்கங்கள் பிரசுரிக்கப்பட்ட 'சவால்களும் சாதனைகளும்' என்ற நூலும் நிகழ்வின்போது வெளியிடப்பட்டது.

சிறுவர்கள் பெண்கள் மற்றும் முதியோர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய வகையில் ஆக்கங்களை எழுதிய மாணவர்களில் வெற்றி பெற்றோருக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X