2025 மே 03, சனிக்கிழமை

எம் மக்கள் துணை போக கூடாது: அரியநேத்திரன் எம்.பி

Kanagaraj   / 2014 மார்ச் 08 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்,ஏ.எஸ்.எம்.முஜாஹித்

ஜெனிவா தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசுக்கு எதிராக அழுத்தங்கள் இருக்கின்ற போது அந்த அழுத்தங்களை குறைப்பதற்கு எமது மக்களையே துணையாளிகளாக மாற்றுகின்றார்கள் அவ்வாறான நடவடிக்கைக்கு எம் மக்கள் துணை போக கூடாது நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கல்முனையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்;ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரஜேஸ்வரன், கலையரசன் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான அமிர்தலிங்கம், விஜயரெட்ணம், கமலதாஸன், ஜேயகுமார் தமிழரசுகட்சியின் மூத்த உறுப்பினர் ஏகாம்பரம் ஆகியோடன் கல்முனை பிரதேச ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பு- கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்துவது தொடர்பில் பேரணி மேற்கொள்ள கல்முனை சிவில் சமுகமானது தீர்மானித்திருப்பது பெய்யான தகவல் எனவும் இதனை காரணமாக வைத்து சில அரச தரப்பைச் சார்ந்தவர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு திரட்டுவதற்கு மக்களை ஒன்று திரட்டுகின்றனர் இது தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறு மக்களை தெளிவுபடுத்துவதற்காகவே இடம்பெற்றது. 

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 

அம்பாறையில் இருக்கக் கூடிய ஒரு பௌத்த மதகுரு பொதுபலசேனாவைச் சேர்ந்தவர் அவரே இதனை ஏற்பாடு செய்திருக்கின்றார். தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பைப் பொருத்த மட்டில் ஒரு ஜனநாயக கட்சியாக இருக்கின்றோம். அது போன்று ஜனநாயக உரிமை எந்தவொரு அமைப்பிற்கும் சாதாரண மக்களுக்கும் இருக்கின்றது. ஆனால் தற்போது இருக்கின்ற காலகட்டத்தில் தமிழ் மக்களை பிழையான வழியில் பிழையான தகவல்களைக் கொடுத்து அவர்களை அந்த பேரணிக்கு அழைப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக பல கிராமங்களுக்குச் சென்று அச்சுறுத்தி நீங்கள் இந்தப் பேரணிக்கு கண்டிப்பாக வரவேண்டும் அவ்வாறு வராவிட்டால் உங்கள் சமுர்த்தி முத்திரை வெட்டப்படும் என்று அச்சுறுத்தி அழைப்பு விடுக்கின்றனர். அதைவிட எதிர்காலத்தில் அபிவிருத்தி வேலைப்பாடுகள் செல்ல வேண்டுமாக இருந்தால் இக்கூட்டத்திற்கு வருகை தரும் பட்சத்தில் தீர்மானிக்கப்படும் என கூறப்படுகின்றது.

உண்மையில் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவது மட்டுமல்ல அவருக்கு சிலை வைத்தால் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் பிழையான செய்திகளை கொடுத்து மக்களை ஏமாற்றாமல் மக்களுக்கு உண்மைக் கருத்துக்களை கூறி ஏன் மக்களை அழைக்கின்றோம் என்ற உண்மையைக் கூறி செயற்பட்டால் அந்த விடயங்களுக்கு எங்களுக்கு மாற்றுக் கருத்துக்களும் ஆட்சேபனைகளும் இல்லை. 

ஆனால் இப்போது இருக்கின்ற சூழல் எமது 64 வருட விடுதலைப் போராட்டம் அகிம்சை ரீதியாக ஆயுத ரீதியாக இடம்பெற்று இன்று சர்வதேச ரீதியாக ஓர் நிலையை எட்டியுள்ள நிலையில் ஜெனிவாவில் எமது நாட்டின் மனித உரிமை மீறல் தொடர்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் மனித உரிமைகள் மீறப்பட்டமை தொடர்பாக நவநீதம்பிள்ளை அவர்களும் அறிக்கை கொடுத்து தற்போது அமெரிக்காவும் அறிக்கை விட்டிருக்கின்றது.

இந்த நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினராகி நாங்கள் இந்த நாட்டில் சர்வதேச விசாரணை இடம்பெற்று இதன் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு ஓர் அழுத்தம் கொடுத்து அதற்குரிய தீர்வு மற்றும் இராணுவ மயாமாக்கல் குறைத்தல் போன்ற தீர்வை பெற இருக்கின்ற இந்த நேரத்தில் தமிழ் மக்களை வைத்துக்கொண்டு அரசுக்கு சார்பாக தமிழ் மக்கள் இருக்கின்றார்கள் என்பதைக் காட்டுவதாக அப் பேரணி இடம்பெறுவதாகத்தான் நாம் இதனை நோக்குகின்றோம். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சொல்வது என்னவென்றால் ஜனாதிபதியை ஆதரிக்க வரவேற்க வேண்டும் என்பதற்கோ அல்லது கல்முனை பிரதேச சபையை தரமுயர்த்துவதற்கோ எமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.

ஆனால் இந்த காலகட்டத்தில் ஜெனிவா தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசுக்கு எதிராக அழுத்தங்கள் இருக்கின்ற போது அந்த அழுத்தங்களை குறைப்பதற்கு எமது மக்களையே துணையாளிகளாக மாற்றுகின்றார்கள். அவ்வாறான நடவடிக்கைக்கு எம் மக்கள் துணை போக கூடாது என்பதை தெளிவு படுத்த வேண்டிய கடப்பாடு எமக்கு இருக்கின்றது என்ற காரணத்தினாலேயே இந்த பத்திரிகையாளர் மாநாட்டினை வைத்தோம்.

இதனை வைக்க வேண்டும் என்று நாங்கள் எண்ணியிருக்கவில்லை ஆனால் எங்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் இது தொடர்பாக சம்மந்தப்பட்ட மக்களுக்கு தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள் இதன் பின் ஏற்கனவே கூறப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் பௌத்த தேரர் எமது உறுப்பினர்களை தொலைபேசியில் மிரட்டியுள்ளார்.

 இவ்வாறு அவர் செயவதனை பொறுப்பு வாய்ந்த எமது தமிழ் தேசிய கூட்டமைப்பு அனுமதிக்க முடியாது எமது கண்டனத்தை தெரிவிக்கின்றோம். எனவே நாம் எமது மக்களுக்கு கூறுவது என்னவென்றால் இவ்வாறு எமது பிரச்சனை சர்வதேச ரீதியில் ஜெனீவா தீர்மானத்திற்கு சென்றுகொண்டிருக்கும் காலத்தில் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். எங்களை நாமே உதாசீனம் செய்யும் நடவடிக்கைக்கு எம்மை பயன்படுத்துகின்றார்கள் இந்த நடவடிக்கைக்குப் பின்னால் செல்லாமல் விழிப்பான இருந்து தொடர்ச்சியாக எமது போராட்டத்தின் இலக்கை அடையும் வரை உறுதியாக இருக்க வேண்டும். 

இந்த கல்முனை பிரதேச சபை தரமுயர்த்துவது தொடர்பில் 1990 ஆம் ஆண்டுகளில் இருந்தே எமது தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது ஆனால் அது பயனளிக்கவி;லலை ஆனால் எமது முயற்சிகள் இன்றுவரையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
 எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு எதுவும் செய்யவில்லை என்று எவரும் கூறமுடியாது. இந்த கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதற்கு இங்கிருக்கின்ற முஸ்லீம் அரசியல்வாதிகள் தடையாக இருக்கின்றார்கள் என்பது வெளிப்படையான உண்மை அவர்களை இந்த வழியில் கொண்டுவர வேண்டும் என்பதற்காக தமிழ்த்; தேசிய கூட்டமைப்பு பலதடவை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 

இப்போது கூட தொர்ந்தும் எமது முயற்சிகள் தொடர்ந்த வண்ணம் தான் இருக்கின்றது இதனை யாராவது செய்ய வேண்டும் என்பதற்காகதான் இந்த நடவடிக்கைக்குள் பொதுபல சேனா அமைப்பு வரும் போது நாம் மௌனமாக இருந்தோம் எனவே பிரதேச சபை தரமுயர்த்தப் படுவது தொடர்பில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அந்த காரணத்தை வைத்துக் கொண்டு அரசியல் நடத்துவதற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்துவதற்கான சில நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் அதற்கு பொதுபல சேனா என்ற அமைப்பை பயன்படுத்துவதுதான் எமக்கு மிகவும் வேதனையளிக்கின்றது. 

அவரைப் பயன்படுத்துவது எமக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் தற்போது இருக்கின்ற காலகட்டத்தில் அவர் எம்மக்களை பயன்படுத்துகின்றார் பிழையான செய்திகள் கொடுக்கப்பட்டு அவருக்கு பாராட்டு கொடுக்க வேண்டும் அவரை வரவேற்க வேண்டும் என்று கூறுகின்றார் ஏன்  அதனை தற்போது செய்ய வேண்டும் ஜனாதிபதி எப்போது தெரிவு செய்யப்பட்டார்.
 
 ஏன் இந்த காலகட்டத்தில் மேற்கொள்ள வேண்டும் தற்போது இதனை செய்யும் போது சர்வதேச ரீதயாக சென்றிருக்கும் பிரச்சனைக்கு தமிழ் மக்கள் எதிராக இருக்கின்றார்கள் தங்களுடன் இருக்கின்றார்கள் என்பதைக் காட்டுவதற்காக எடுக்கின்ற முயற்சி என்பதற்காக தான் நாம் மக்களை இதன் பின்னால் செல்ல வேண்டாம் விழிப்பாக இருங்கள் என்று சொல்கின்றோமே தவிர இது கல்முனை பிரதேச செலகத்தை தரமுயர்த்துவதற்காக என்றால் இதனை இம்மாதம் 28ம் திகதிக்குப் பின்னர் இவ்வாறான கூட்டங்களை நடத்தி மேற்கொள்வதென்பது வரவேற்கத்தக்க விடயம். 

ஆனால் தற்போது பிழையான செய்திகளை மக்களுக்கு கூறி செய்வதுதான் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. எமது தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்போதும் அம்பாறை மாவட்டத்தைக் கைவிட்டு விட முடியாது எமது தலைமையும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றோம் நாம் இந்த மாவட்டத்தினைக் கைவிட முடியாது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X