2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

சர்வதேச மகளிர் தின பேரணி

Kanagaraj   / 2014 மார்ச் 08 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

இன்று சர்வதேச மகளிர் தினத்தையிட்டு கிழக்கில் பிரதான நிகழ்வாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட பெண்கள் அமைப்புக்கள் சமூக அமைப்புக்கள் ,அரசசார்பற்ற நிறுவனங்கள் இணைந்து அக்கரைப்பற்றில் பேரணியும் மாநாடும்  சனிக்கிழமை(08) காலையில் இடம்பெற்றது

அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் ஏற்பாட்டில் 2014 ஆண்டு பெண்களுக்கு சமத்துவமும் அனைவருக்கும் முன்னேற்றம் என்ற தொனிப் பொருளில்  பேரணி  ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் முன்னால் இன்று காலை 9.30 ஆரம்பித்து  சாகாம வீதி ஊடாக அக்கரைப்பற்று நகர் சென்று அங்கிருந்து கல்முனைவீதி ஊடாக மாநாடு இடம்பெறும் அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கிற்கு காலை 11 மணிக்கு சென்றடைந்தது

இப் பேரணியில்  பெண்களுக்கு உரிமையும் சமத்துவத்திற்கும் ஒன்றினைந்து குரல்கொடுப்போம், வன்முறையில்லா வீட்டையும் நாட்டையும் உருவாக்குவோம், என பல்வேறு வாசகங்கள் அடங்கிய சுலோகங்கள் தாங்கிவாறு ;வீதி நாடகங்கள் உடன் பேரணியாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த மூவினங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள்  கலந்துகொணடு மட்டக்களப்பு .அம்பாறை மாவட்டங்களில் உள்ள பெண்களின் வளர்ச்சியையும் அவர்களின் வெற்றிகளையும் நினைவு கூர்ந்து கொண்டனர்;,

சர்வதேச பெண்கள் தினத்துடன் அதற்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கு முடிவடையாது அதைத் தொடர்ந்து பரவலாக்கம் செய்யக் கூடிய முன்னெடுப்புக்களை கொண்டு செல்லல், கடந்த 2013 ஆண்டு எடுக்கப்பட்ட தலைப்பான மதுபாவனையைத் தடுத்தல் .பெண்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் உள்ள சிக்கல்களைத் தீர்த்தல், பெண்களும் வறுமையும் போன்றவற்றில் ஒரு விடயத்தை தெரிவு செய்து அவ்விடயம் தொடர்பாக பகுப்பாய்வு செய்து உறுதியான செயற்பாட்டை இவ்வாண்டில் முன்னெடுத்தல்

எதிர்காலத்தில் அனைவரும் இணைந்து தாமாகவே சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடுகின்ற உணர்வினை சமூகத்தில் ஏற்படுத்தல் வன்முறையற்ற வாழ்க்கையை அனுபவிப்பதற்கு பெண்களாகிய எங்களுக்கு சகல உரிமையும் உண்டு, சமூக, அரசியல், பொருளாதார துறைகளில் உள் நுழைவதற்கும் இம் மூன்று துறைகளிலும் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்வதற்கான அனைத்து உரிமைகளும் எமக்குண்டு,  என தீர்மானங்களையும்; தொடர் நடவடிக்கைக்கான உறுதிமொழியையும்  பிரகடனம் செய்தனர் .;










  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X