2025 மே 03, சனிக்கிழமை

மரண விசாரணை அதிகாரியை ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு

Kanagaraj   / 2014 மார்ச் 08 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளின் பின்னர் மரணமான திருமதி கோல்டன் பெஞ்சமின் சாந்தி தொடர்பில் அவரது கணவரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மட்டக்களப்பு திடீர் மரண விசாரணை அதிகாரியை அடுத்த மாதம் 4ஆம்திகதி நீதிமன்றில் ஆஜர் படுத்துமாறு நீதவான் என்.எம்.எம்.அப்துல்லா உத்தரவிட்டுள்ளார்.

தனது மனைவியின் மரணம் தொடர்பில் தனக்குச் சந்தேகம் இருப்பதாகக் கூறி கோல்டன் பெஞ்சமின் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு விசாரணை நேற்றைய தினம் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதவான் இந்த உத்தரவினைப்பிறப்பித்தார்.

திடீர் மரண விசாரணை அதிகாரியை ஆஜர்படுத்தியதன் பின்னர் இவ் வழக்கில் சம்பந்தப்படும் இரண்டு மகப்பேற்று நிபுணர்களையும் மன்றில் ஆஜர்படுத்த வேண்டும்  என்றும் நீதவான் என்.எம்.எம்.அப்துல்லா குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

2012ஆம் ஆண்டு 9ஆம் மாதம் 11ஆம்திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட திருமதி கோல்டன் பெஞ்சமின் சாந்தி 17ஆம்திகதி மரணமானார். இவரது மரணம் தொடர்பில் கோல்டன் பெஞ்சமின் சுகாதார அமைச்சு மற்றும் பொலிஸ மா அதிபர் உள்ளிட்டோரிடம் செய்த முறைப்பாடுகளையடுத்து விசாரணைகள் முடுக்கி விடப்பட்டிருந்தன.

இந்த ஒழுங்கில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, மரண விசாரணை, பிரேத பரிசோதனை செய்யப்படாமல் புதைக்கப்பட்ட கோல்டன் பெஞ்சமின் சாந்தியின் சடலம் கள்ளியன்காடு மயானத்தில் இருந்து 23.07.2013ல் தோண்டி எடுக்கப்பட்டு அம்பாறை வைத்தியசாலையில் மரணவிசாரணைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

பின்னர், சுகாதார அமைச்சின் சுற்றி வளைப்புப்பிரிவினர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இவ் மரணம் தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதே நேரம், கோல்டன் பெஞ்சமின் சாந்தியின் மரணம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக அவர்களும் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0

  • avini manjulika Sunday, 09 March 2014 01:58 PM

    சரியான முடிவு கிடைக்கும் வரை காத்திருப்போம்

    Reply : 0       0

    goldan benjamin Sunday, 09 March 2014 02:16 PM

    இதில் சம்மந்தப்பட்ட டாக்டர்மாருக்கு தண்டனை கொடுப்பதை பார்ப்பதற்கு ஆவலாக உள்ளோம்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X