2025 மே 03, சனிக்கிழமை

உண்டியலை கொள்ளையிட முயற்சி

Kanagaraj   / 2014 மார்ச் 08 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்

மட்டக்களப்பு,காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடாவில் பிரதான வீதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தின் உண்டியலை உடைத்து கொள்ளையிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் முறையிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் உள்ள நாவற்குடா கத்தாவடி பிள்ளையார் ஆலயத்திலேயே வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த உண்டியல் உடைப்பு சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் சிலர் ஆலயத்தின் உண்டியலை உடைத்துக்கொண்டிருக்கும்போது அப்பகுதியால் வாகனம் ஒன்றுவரவே அவர்கள் தப்பிச்சென்றுள்ளதாக ஆலயத்தின் தலைவர் ந.ரவீந்திரகுமார் தெரிவித்தார்.

எனினும் உண்டியல் உடைக்கப்பட்டுள்ளபோதிலும் அதில் இருந்து எதுவும் பணம் கொள்ளையிடப்பட்டதற்கான சான்றுகள் எதுவும் இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளையும் மேற்கொண்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக ஆலயம், தபால் நிலையங்களில் கொள்ளைச்சம்பவங்கள் அதிகரித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X