2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மண்முனை பாலத்திற்கூடாக பெரிய பாதிப்புக்கள் வரவுள்ளன: த.தே.கூ.

Kogilavani   / 2014 மார்ச் 11 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


 -வடிவேல்-சக்திவேல்


'மண்முனைப் பாலம் மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆனால் இதனை வைத்துக் கொண்டு எம்மக்களின் உரிமைகள் உள்ளிட்ட அனைத்தும் பறிபோகாமல் பாதுகாக்க வேண்டும். மண்முனை பாலத்திற்கூடாக பாதிப்புக்கள் பெரிதாக வரக் காத்திருக்கின்றது' என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் திங்கட்கிழமை (11) தெரிவித்தார்.

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுமுந்தன்வெளிக் கிராமத்திற்கு விஜயம்செய்து அக்கிராம மக்களின் குறைநிறைகளைக் கேட்டறியும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'மிகவிரைவில் பாரியதொரு அச்சறுத்தல் எமக்கு வர இருக்கின்றது. எதிர்வரும் ஏப்பரல் மாதம் திறக்கபட இருக்கின்ற படுவான்கரைக்கும் எழுவான்கரைக்கும் இடையிலான இணைப்புப் பாலமான மண்முனைப்பாலம் திறக்கப்படுவதனால் காத்தான்குடி சிலவேளைகளில் படுவான்கரைக்குள் வரலாம் என்ற அச்சம் வந்துள்ளது.

ஏனெனில் தற்போது அரசாங்கத்திலே இருக்கின்ற முஸ்லிம் அமைச்சர்மார் எமது படுவான்கரைப் பகுதியிலே காணிகளை வாங்குகின்றார்கள். எமது மக்களும் அவர்களுக்கு விற்பனை செய்யும் தொகையை விட பன்மடங்கு காசு வருகின்றதுதானே என நினைத்து அவர்களுக்கு விற்று விடுகின்றார்கள்.

இதனால் எதிர்காலத்தல் பல பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ள நேரிடுவது மாத்திரமின்றி ஒருவகையில் எமது இனத்திற்குத் துரோகம் செய்கின்றவர்களாக மாறிவருகின்றோம் என்பதனையும் மறந்து விடக்கூடாது.

அவ்வாறு எமது பிரதேசத்தினுள் வேறு இனத்தவர்கள் நிரந்தரமாக்கப் படுவார்களேயானால் நாளடைவில் எம்மக்கள் மெல்ல மெல்ல வேறு இனத்திற்கு மாறிவிடுவார்கள்.

இவற்றினால் எமது கலை, கலாசாரங்கள் சீரழியும், கால்நடைகள் அதிகளவில் அழிவடையும் எனவே எம்மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இவற்றில் கிராம மட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஊர்ச் சட்டங்களை உருவாக்கி அமுல்;படுத்துங்கள். இல்லாவிட்டால் நாங்கள் சீரழிந்து போய்விடுவோம். காத்தான்குடியில் ஒரு தமிழ் குடும்பமும் இல்லை. ஏறாவூர் நகரில் ஒரு தமிழ் குடும்பபமும் இல்லை.  அதுபோல் ஓட்டமாவடியில் 112 தமிழ் குடும்பங்கள் வசித்து வந்தனர். அர்கள் தற்போது அங்கு இல்லை. அவர்கள் தங்களது காணிகளை விற்று விட்டு வெளியேறிவிட்டனர்' என அவர் மேலும் தெரிவித்தார்.

நான் கௌரவமாக பிச்சை எடுப்பேன்


இதேவேளை, 'இவ்வருடத்திற்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3000 பேருக்கு மூக்குக் கண்ணாடிகளை இலவசமாக வழங்குவதற்கும் திட்டமிட்டுள்ளேன். நான் கௌரவமாகப் பிச்சை எடுப்பேன். அவ்வாறு எடுக்கப்படும் பிச்சையில்தான் இவ்வாறாக மக்களுக்கு உதவிகள் புரிந்து வருகின்றேன்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,  

'கடந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 120 விதவைகளின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்திருக்கின்றோம். இவ்வருடம் அதனை விட அதிகமான விதவைக் குடும்பங்களுக்கு மிளகாய் அரைக்கும் மில், நல்லின பசுமாடுகள், தையல் இயந்திரங்கள் போன்ற வாழ்வதார உதவிகளைப் புரிவதற்கு வெளிநாடுகளில் நான் கௌரவமாக பிச்சை எடுக்க திட்டமிட்டுள்ளேன்.

அதுபோல் வறிய மாவணரவ்களின் கற்றலுக்கு உதவுதல், பல்கலைக்கழகங்களில் கற்கும் வறிய மாணவர்களுக்கு உதவுதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றேன்.

ஏற்கனவே மட்டக்களப்பு மாட்ட இந்து இளைஞர் அமைப்பானது பல்கலைக்கழகங்களில் கற்கின்ற 79 வறிய மாணவர்களுக்கு மாதாந்தம் உதவி வழங்கி வருகின்றது. எனது தனிப்பட்ட நிதியில் 32 பேருக்கும் உதவி வழங்கி வருகின்றேன். இந்த செயற்பாடுகளை மேலும் அதிகரிக்க தீர்மானித்துள்ளேன்.

எமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு எம்மால் செய்யக் கூடிய அனைத்தினையும் செய்யவுள்ளோம். யுத்த சூழல் காரணமாக அங்கவீனமாக்கப் பட்டவர்கர்களில் 40 பேருக்கு கடந்த வருடம் உதவினோம். இவ்வருடம் அதனை அதிகரிப்பதற்கும் திட்டமிட்டுள்ளோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X