2025 மே 03, சனிக்கிழமை

மட்டு.மாவட்டத்தில் அமைதியான முறையில் தபால்மூல வாக்களிப்பு

A.P.Mathan   / 2014 மார்ச் 13 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தென் மற்றும் மேல் மாகாண சபைத்தேர்தல்களுக்கான தபால்மூல வாக்களிப்பு சுமுகமாக இடம்பெற்று வருகின்றது.

இம்மாவட்டத்தில் 723 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்மாவட்டத்திலுள்ள பொலிஸார், இராணுவத்தினர் உட்பட முப்படையினரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் செங்கலடி பிரதேசத்திலுள்ள அரச ஊழியர் ஒருவரும் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு, பட்டிருப்பு, கல்குடா ஆகிய தேர்தல் தொகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்கள், படைமுகாம்களில் இன்று காலைமுதல் தபால் மூல வாக்களிப்பு இடம் பெற்றுவருகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X