2025 மே 03, சனிக்கிழமை

சிறுகைத்தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2014 மார்ச் 13 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம் படுத்தும் நோக்கோடு சிறுகைத்தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மாவட்ட தமிழ் முஸ்லிம் பெண்கள் நடாத்திய இந்நிகழ்வில் பெண்களினால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்வதற்கான சந்தையொன்று திறந்து வைக்கப்பட்டது.

காவியா புதுவாழ்வுச் சந்தை எனும் பெயரில் பன், தெங்குச் சிரட்டை, கைத்தறி உடுப்புக்கள், சிப்பியினால் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் மாப்பொருட்களினால் செய்யப்பட்ட உணவு பொருட்கள் இதன்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில், மாவட்ட அரச அதிபர் பி.எஸ்.ஏம். சாள்ஸ், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்சளியன், பிரதேசசெயலாளர் வி. தவராசா, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஏ.சி.ஏ. அசீஸ், காவியா நிறுவக பணிப்பாளர் வை.அஜித்குமார் மற்றும் சர்வதேச தொழில் நிறுவனப் பணிப்பாளர் ஆர்.சிவப்பிரகாசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X