2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

மட்டு. தொழில்நுட்பக் கல்லூரியில் டிப்ளோமா கற்கை நெறிகள் ஆரம்பம்.

Super User   / 2014 மார்ச் 15 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியில் கடந்த 20 வருடகாலமாக  சான்றிதழ் தரம் கொண்ட கற்கை நெறிகள் நடாத்தப்பட்டு வந்த நிலையில், முதல் தடவையாக டிப்ளோமா தரம் கொண்ட (Nஏஞ – 5) கற்கை நெறிக்கான அனுமதி இக் கல்லூரிக்கு கிடைத்துள்ளது.

இதனை முன்னிட்டு இக் கற்கை நெறிக்கான ஆரம்ப விழா எதிர்வரும் திங்கட்கிழமை (17) தொழில்நுட்பக் கல்லூரி ஒன்று கூடல் மண்டபத்தில் நடாத்தப்படவுள்ளது.

இதற்கு தொழில்நுட்பக் கல்வி பயிற்சித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.பாலசுப்ரமணியம், மூன்றாம் நிலைக்கல்வி ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி எஸ்.டி.ஆர்.பெரேரா ஆகியோர் பிரதம அதிதிகளாகவும் கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலாந்தர் அழகியல் கல்வி நிறுவக பணிப்பாளர் கலாநிதி கே.பிறேம்குமார், காடி தொழில்நுட்பவியல் கல்லூரியின் பணிப்பாளர் ஜனாப். ஏ.எல்.பதுறுதீன் ஆகியோர் விஷேட அதிதிகளாக கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.

இதன் போது மேலும் சில டிப்ளோமா கற்கை நெறிகள் ஆரம்பிப்பதற்கான கோரிக்கைகளை மாணவர்கள் முன்வைக்கவுள்ளனர் என கல்லூரியின் அதிபர் ரி.ரவிச்சந்திரன் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X