2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

முச்சக்கர வண்டிகளுக்கு விஷேட ஸ்டிக்கர் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது

Kanagaraj   / 2014 மார்ச் 15 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியிலுள்ள முச்சக்கர வண்டிகளுக்கு விஷேட ஸ்டிக்கர் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

காத்தான்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரிச் சங்கத்தினால் காத்தான்குடி பொலிசாருடன் இணைந்து இந்த ஸ்டிக்கர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

தனை முச்சக்ர வண்டிகளுக்கு நேற்று வெள்ளிக்கிழமை (14.3.2014) ஒட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

காத்தான்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொதுச்சபை கூட்டம் காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தில் நடைபெற்ற போதே இந்த விஸேட ஸ்டிக்கர் அறிகப்படுத்தப்பட்டது.

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவுக்கான பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ.துசாற இதனை ஒரு முச்சகர வண்டிக்கு ஒட்டி ஆரம்பித்து வைத்தார்.

இதில் காத்தான்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் எம்.பானு, மற்றும் செயலாளர் ஏ.பி.ஏ.நிகார், பொருளாளர் எம்.கலீல் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் உட்பட அதன் அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரிச் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட 464 முச்சக்கர வண்டிகளுக்கு இந்த விஷேட ஸ்டிக்கர்களை ஒட்டி அடையாளப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் ஏ.பி.ஏ.நிகார் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X