2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ரயில் மீது கல்வீச்சு; ஒருவர் படுகாயம்

A.P.Mathan   / 2014 மார்ச் 16 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரத வண்டியானது கல்லெறி தாக்குதலுக்குட்பட்டதினால் பிரயாணி ஒருவர் காயமுற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (14) மாலை 6.45 மணிக்கு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள பிறைந்துறைச்சேனைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது நாரஹேன்பிட்டியைச் சேர்ந்த மொஹமட் றியனில் மொஹமட் றிஷன் வயது (20) என்ற இளைஞனே காயமுற்றுள்ளார்.

காயமுற்ற மேற்படி இளைஞன், வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதமானது வாழைச்சேனை புகையிரத நிலையத்தில் தரித்து நின்று மீண்டும் கொழும்பு நோக்கி புறப்பட்ட வேளை, பிறைந்துறைச்சேனை புகையிரத பாதையின் அருகே காணப்பட்ட இளைஞர்கள் சிலரால் புகையிரதத்தை நேக்கி கற் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது புகையிரத வண்டியின் ஜன்னல் ஓரப்பகுதியில் இருந்து பயணித்த மேற்படி இளைஞனின் கண் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புகைவண்டி இடைநடுவில் நிறுத்தப்பட்டு புகையிரத அதிகாரிகளினால் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருந்தார்.

இச் செயற்பாட்டினால் பயணிகள் அளெகரியத்தை எதிர்நோக்கியதுடன் பயணத்தில் சிறிது தாமதமும் ஏற்பட்டதாகவும் பயணிகள் கவலை தெரிவித்தனர். இது தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதுவரையில் இது தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X