2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் புதிய தலைவி

A.P.Mathan   / 2014 மார்ச் 16 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்ட உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் 9ஆவது தலைவியாக திருமதி சோமாவதி சிவசுப்பிரமணியம் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) தெரிவு செய்யப்பட்டார்.

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள இணையத்தின் அலுவலகத்தில் இன்று காலை முதல் நடைபெற்ற வருடாந்த பொதுச் சபைக் கூட்டத்தில், மட்டக்களப்பு பெண்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவியான திருமதி சோமாவதி சிவசுப்பிரமணியம் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார்.

54 உள்ளூர் அரசார்பற்ற நிறுவனங்களை உறுப்பினராகக் கொண்ட இணையம் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பில் இயங்கி வருகிறது.

பேராசிரியை திருமதி மனோ சபாரத்தினத்தினால் 2002ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இணையத்தில் பேராசிரியை திருமதி மனோ சபாரத்தினம், ஏ.செல்வேந்திரன், வி.கமலதாஸ், ஆர்.ரஞ்சன், கே.நாகராஜன், உள்ளிட்டோர் தலைவர்களாக கடமையாற்றியுள்ளனர்.

கடந்த காலங்களில் மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் தேவையுள்ள மக்களிற்கு பல்வேறுபட்ட வகைகளிலும் உதவிகளை மேற்கொள்ளும் வகையில் இணையம் செயற்பட்டு வருகிறது.

இவ் இணையத்தின் 2014 - 2015ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபையில் தலைவியாக திருமதி சோமாவதி சிவசுப்பிரமணியம், உப தலைவராக பட்டிப்பளை ஹிண்டோ நிறுவனத்தின் வி.கமலதாஸ், செயலாளராக கிராமிய அபிவிருத்தித்திட்டமிடல் அமைப்பின் வி.ரமேஸ் ஆனந்தன், உப செயலாளராக அன்பு இதயம் பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் முஹமது புகாரி சித்தி சபீக்கா, பொருளாலராக மீசான் ஸ்ரீலங்கா அமைப்பின் எம்.எம்.எம்.நளீம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

அதேநேரம், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் நிர்வாக சபைப் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

அத்துடன், இணையத்தின் இன்றைய பொதுச் சபைக் கூட்டத்தில் யாப்புத் திருத்தத்திற்கு அமைவாக ஆலோசனைக்குழு ஒன்று தெரிவு செய்யப்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபர்களான ஏ.கே.பத்மநாதன், கலாநிதி ஆர். மோனகுருசாமி, பதவி வழியாக தற்போதைய அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு, கிழக்குப் பல்கலைக்கழக சமூகவியல் துறை ஜீ.தில்லைநாதன், முன்னாள் நெகோர்ட் பணிப்பாளர் எஸ்.சிவானந்தராஜா, முன்னாள் திட்டமிடல் பணிப்பாளர் பி.ஜெயராம், மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சம்மேளனங்களின் ரி.ரஞ்சிதமூர்த்தி, எம்.செல்வராசா, இலங்கை அபிவிருத்தி உதவி மையத்தின் பிரதிநிதி எஸ்.சொர்ணலிங்கம் ஆகியோர் முன்மொழியப்பட்டுள்ளனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X