2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ஹபரணையில் இளம் பெண்ணை தொலைத்த மாமனார்

A.P.Mathan   / 2014 மார்ச் 16 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு கிண்ணையடியிலுள்ள தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்த இளம் தாய், ஹபரணைக் காட்டுப்பகுதியில் வைத்துக் காணாமல் போயுள்ளதாக வாழைச்சேனை மற்றும் ஹபரணை ஆகிய பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கிண்ணையடியைச் சேர்ந்த திருமதி தெய்வேந்திரன் நுகேந்தா (22) என்பவரே இவ்வாறு சனிக்கிழமை (15) அதிகாலை காணாமல் போயுள்ளதாக வாழைச்சேனை மற்றும் ஹபரணைப் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பெண், தனது தாய் மற்றும் குழந்தையுடன் கடந்த 08ஆம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள அவருடைய மாமனாரின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அங்கு சென்று இரண்டு நாட்களில் தாயார் அவருடைய இரண்டரை வயது குழந்தையும் அழைத்துக் கொண்டு வீடு (கிண்ணையடி) திரும்பிய நிலையில், இவர் தனது மாமனாருடன் வெள்ளிக்கிழமை (14) மாலை பஸ்ஸில் வந்துள்ளார்.

வழியில், ஹபரணைப் பகுதியிலுள்ள உணவு விடுதி ஒன்றில் இரவு உணவுக்காக பஸ் நிறுத்தப்பட்ட வேளை, தான் பஸ்ஸில் இருப்பதாகக் கூறவே மாமனார் உணவு வாங்கிக் கொடுத்துள்ளார். அதனுடன் இருந்த பெண், மாமனார் உணவு உண்டுவிட்டு வந்தவேளை பஸ்ஸில் இருக்கவில்லை. அதனைத் தொடர்ந்து பிரதேசத்தில் தேடியும் கிடைக்காத நிலையில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவர் கையில் வைத்திருந்த பொதிகள் பஸ்ஸிலேயே இருந்ததாக அவருடைய மாமனார் தெரிவிக்கிறார்.

இவருடைய கணவர், சவூதி நாட்டிற்கு தொழிலுக்காகச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X