2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ஜெனீவா தீர்மானங்கள் நிறைவேறியிருந்தால் பிரச்சினை புரையோடியிருக்காது: செல்வராசா

Menaka Mookandi   / 2014 மார்ச் 17 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.ரவீந்திரன்

ஜெனீவாவிற்குச் சென்று தங்களது பிரசாரங்களை அரசாங்கமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மேற்கொண்டு வருகின்றார்கள். எப்படி இருந்தாலும் ஜெனீவாவில் 2012, 2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படடிருந்தால் எமது பிரச்சினை இவ்வாறு புரையோடிப்போய் இருக்காது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.

மட்டக்களப்பு, வெல்லாவெளி காக்கச்சிவட்டைப் பிரதேச மக்களுடன் ஞாயிற்றுக்கிழமை (16) பகல் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் உரையாற்றிய அவர், 'தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் பயங்கரவாதிகள் அல்ல. நாம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற பிரதிநிதிகள் தற்போது பயங்கரவாதிகளாக இருந்தவர்கள் எல்லாம் ஜனநாயகவாதிகள் என்று சொல்கின்றனர்.

ஆனால் நாங்கள் என்னேரமும் ஜனநாயகவாதிகள். நாம் அன்றும் இன்றும் என்றும் ஜனநாயகவாதிகளாகத் தான் செயற்பட்டு வருகின்றோம். எனவே எம்மை பிழை பிடிப்பதற்கு எமது நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு இங்கு எவர் வந்தாலும் பிரச்சினையில்லை நாம் சரியானதைப் பேசுகின்றோம். சரியானதை மக்களுக்கு தெளிவுபடுத்துகின்றோம்' என்றார்.

எமக்கு எதுவித பயமும் இல்லை. ஏனெனில் நாங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல. ஆங்கிலத்தில் சொல்லப்போனால் WE ARE DEMOCRETICT WE ARE MORDERATE POLITICION. நாங்கள் உண்மையில் ஒரு நல்ல வாய்ப்புள்ள அரசியல்வாதிகள் என்றும் நாம் பயங்கரவாதிகளாக இருக்க மாட்டோம் நாம் மக்கள் சேவகர்களாகவே இருப்போம்.

எம் இனத்திற்கு தேவையானதைப் பெற்றுக்கொடுப்பதற்கு நாம் என்றுமே தயங்க மாட்டோம். எமது இனத்திற்கு தேவையானது என்ன?. கடந்த 65 வருட காலமாக எம் தமிழ் இனத்திற்கு அபிலாஷை ஒன்று தேவைப்பட்டது. இந்த அபிலாஷைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.

இந்த அபிலாஷைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதற்காகத் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று நேற்றல்ல தந்தை செல்வா அவர்கள் 1949ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியை ஆரம்பித்து அன்றிலிருந்து சாத்வீகப் போராட்டம் மூலம் இதனை அனுகினார். இன்று மீண்டும் அந்த சாத்வீகப் போராட்டம் இராஜதந்திரப் போராட்டமாக மாறி நாம் இன்று சர்வதேசத்தின் பார்வைக்கு எமது விடயத்தைக் கொண்டுவந்திருக்கின்றோம்' என்றார்.

'சர்வதேசம் எங்களை ஓரளவு நினைத்துப் பார்க்கின்றது என்று சொன்னால் அதற்கு காலாக இருந்தவர்கள் தமிழ் தேசிய கூட்டமைபே தவிர வேறு எவராகவும் இருக்க முடியாது. இன்று அபிவிருத்தியடைந்த நாடுகள் எம் தமிழ் மக்களை இந்த நாட்டில் திரும்பிப் பார்க்கின்றார்கள் என்றால் அது தமிழ் தேசிய கூட்டமைப்பின் முயற்சி என்பதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் இந்த இலங்கையிலுள்ள எம் தமிழ் மக்கள் படுகின்ற அவஸ்தைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து அவர்களின் சோதனைகளிலும் வேதனைகளிலும் முற்றும் முழுதாக அவர்களுக்கு உதவியாக இருக்கின்றது. அதனால் தான் நாம் இன்று இந்த ஒரு நிலையை அடைந்திருக்கின்றோம்.

எனவே எமது இருப்பை எமது தமிழ் மக்களின் எதிர்காலத்தை நாம் தக்க வைக்க வேண்டுமாக இருந்தால் நாம் அன்று எந்த வீதத்தில் அரச உத்தியோகஸ்தர்களாக இருந்தோமோ அந்த நிலையை நாம் தக்கவைக்க வேண்டுமாக இருந்தால் நாம் எமது வடகிழக்கு மாகாணத்தில் இருப்புக்களை தக்கவைக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்' என்று தெரிவித்தார்.      

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X