2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பாலமுனையில் சிசுவின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 18 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,ரி.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனைக் கடற்கரையில் கரையொதுங்கிய பெண் சிசுவின் சடலமொன்றை திங்கட்கிழமை (17) மாலை மீட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கரையொதுங்கிய இச்சடலத்தை கண்ட மீனவர்கள் இது தொடர்பில் பாலமுனை  கிராம அலுவலருக்கும்  பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர். இதனைத் தொடர்ந்து, குறித்த இடத்திற்குச் சென்று காத்தான்குடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு சடலத்தை மீட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

இச்சிசு பிறந்து 02 அல்லது 03 நாட்களே இருக்கலாமெனவும் பொலிஸார் கூறினர்.

மேலும், குறித்த இடத்திற்குச் சென்று சடலத்தை பார்வையிட்ட ஏறாவூர் மற்றும் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தின் நீதவானும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவானுமான ஏ.எம்.றியாழ், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை  மட்டக்களப்பு போதனா  வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறும் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

அத்துடன், இச்சடலம் கரையொதுங்கியதைக்  கண்டவர்களை எதிர்வரும் 25ஆம் திகதி நீதிமன்றத்திற்கு சமூகமளிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

இந்நிலையில், சடலம் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

இது தொடர்பில் விரிவான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X