2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

தமிழ், முஸ்லிம்களின் ஒற்றுமையை குலைக்க த.தே.கூ. முற்படுகிறது: சுபைர்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 18 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் ஒற்றுமையை குலைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்படுவதாக கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

ஏறாவூர்,  ஐயங்கேணி கிராமத்தில் குழந்தைகளுக்கும் கர்ப்பிணித் தாய்மார்களுக்குமாக 350 பேருக்கு இலவசமாக  02 பால் மா பொதிகள் படி  திங்கட்கிழமை (17) வழங்கப்பட்டன. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும்  மாகாணசபை உறுப்பினர்களும் ஏறாவூரிலுள்ள ஐயங்ண்ணி எனும் தமிழ் மற்றும் முஸ்லிம்களின் எல்லைக் கிராமங்களினுள்; புகுந்து மக்களை அச்சுறுத்திவிட்டு போயிருக்கின்றனர்.

ஐயங்கேணி எல்லைக் கிராமத்திலுள்ள தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும்; மிக நெருக்கமாகவும் அந்நியோன்ய நட்புடனும்  காலங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். இக்கிராமத்திலுள்ள தமிழ் மக்கள் ஏறாவூர் முஸ்லிம் பகுதிக்குள்ளேயே மிக நீண்டகாலமாக தொழில் புரிந்து வாழ்வாதாரத்தை கொண்டு செல்கின்றனர். இத்தகைய சக வாழ்வை குலைப்பதற்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சமகால நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இக்கிராமத்திலுள்ள தமிழ் மக்களை அவர்களின் அபிவிருத்திகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வருமாறு கூறி அழைத்து அபிவிருத்தி பற்றி எதுவும் கலந்துரையாடாது,  ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் முஸ்லிம்கள் பற்றி தவறாக கலந்துரையாடி  அச்ச உணர்வை ஏற்படுத்திவிட்டுச்  சென்றிருக்கின்றனர். இவர்களின் இச்செயற்பாடனாது திட்டமிட்ட நடவடிக்கையாகும். இது நாட்டின் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் செயலாகவே பார்க்கப்பட வேண்டும்.

பயங்கரவாதம் நிலவிய காலப்பகுதியில் முஸ்லிம்கள் தங்களது பூர்வீகக் காணிகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். குறிப்பாக இது எல்லைக் கிராமங்களில் இடம்பெற்றது.

இப்போது நிலைமை சுமூகமாக இருப்பதால் அவர்கள் தங்களது சொந்த இடங்களில் குடியேறுகின்றனர். இதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்களே இனக் கலவரத்தை ஏற்படுத்தவும் ஒற்றுமையைச் சீர்குலைக்கவும் முயல்கின்றனர். முஸ்லிம்கள் தமிழ் மக்களது ஒரு அங்குலத்தையேனும் அடாத்தாக பிடிக்கவில்லை. அவ்வாறு எங்காவது நடந்திருந்தால் நீதிமன்றத்தை நாடமுடியும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X