2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

எருமைமாடுகளுடன் மூவர் கைது

Kanagaraj   / 2014 மார்ச் 18 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.ருத்திரன்.

மட்டக்களப்பு ஓட்டமாவடி பகுதியில் சட்டவிரோதமான முறையில் அறுவைக்காக  எருமை மாடுகளை  வைத்திருந்தார்கள் என்ற   சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை சந்தேகத்தின் பேரில்  கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள ஓட்டமாவடி மாட்டுத் தொழுவத்தில் வைத்தே இந்த மூவரையும கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 7 எருமை மாடுகளும் 2 எருமை மாட்டுத்தலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்     கைது செய்யப்பட்டவர்கள் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களை வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்;கான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை இச்சம்பவத்தை தொடர்ந்து இன்று வாழைச்சேனை,ஓட்டமாவடி பகுதிகளில் உள்ள இறைச்சிக்கடைகள் அனைத்தும் திறக்கப்படாமல் மூடிக்காணப்படுகிறது. இதனால் இப்பிரதேசத்தில்  இறைச்சி உணவிற்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X