2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

முன்னோக்கிச் செல்வதற்கு சிறந்த ஆளுமை அவசியம்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 18 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவீந்திரன்


எந்த விடயத்திலும்  முன்னோக்கிச் செல்வதற்கு சிறந்த ஆளுமையும் நல்ல மனப்பாங்கும் குழும  வேலைத்திட்டமும்  அவசியமென மூன்றாம் நிலைக் கல்வி  தொழிற்பயிற்சி ஆணைக்குழுவின்  பணிப்பாளர் நாயகம்   கலாநிதி  டபிள்யூ.பெரேரா தெரிவித்தார்.

மட்டக்களப்பு,  மஞ்சந்தொடுவாய்  தொழில்நுட்பக் கல்லூரியில்   முதல் தடவையாக   தேசிய  தொழில்நுட்ப  சான்றிதழுக்கான (கணிய அளவையியல்)  தேசிய தொழில்சார் தகைமை   தரம்  -05  பாடநெறி திங்கட்கிழமை (17) ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதேவேளை, இங்கு   தொழில்நுட்பக் கல்வி பயிற்சித் திணைக்களத்தின்  பணிப்பாளர் நாயகம்  எஸ்.பாலசுப்பிரமணியம்  உரையாற்றுகையில்,

'மட்டக்களப்பு  தொழில்நுட்பக் கல்லூரி  மேலும் முன்னேற்றமடைய  இப்பாடநெறி  ஆரம்பப்படியாகும். இதைச் சிறந்த முறையில் பயன்படுத்துவது  அதிபர், பிரதி அதிபர், விரிவுரையாளர்கள், மாணவர்களின் தலையாய கடமையாகும். இதற்கு இவர்களின் ஒற்றுமை  அவசியம். அத்துடன், மாணவர்கள் சிறந்த பரீட்சை பெறுபேற்றை  காண்பிக்க வேண்டும்' என்றார்.

இந்நிகழ்வில் மேற்படி தொழில்நுட்பக் கல்வி பயிற்சித் திணைக்களத்தின்  பணிப்பாளர் நாயகம்  எஸ்.பாலசுப்பிரமணியம்,  மூன்றாம் நிலைக் கல்வி  தொழிற்பயிற்சி ஆணைக்குழுவின்  பணிப்பாளர் நாயகம்  கலாநிதி   பெரேரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X