2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கல்வி, மருத்துவ மற்றும் சுயதொழிலுக்கு உதவியளிப்பு

Kogilavani   / 2014 மார்ச் 18 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


போரதீவுப்பற்று அபிவிருத்தி, புனர்வாழ்வு நிறுவனத்தினால் (பி.பி.டி.ஆர்.ஓ)மண்முனை மேற்குப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கல்வி, மருத்துவம் மற்றும் சுயதொழிலுக்கான உதவிகளை திங்கட்கிழமை(17) வழங்கிவைத்தது.

மண்முனை மேற்குப் பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகஸ்தர் த.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் 10 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் 5 மாணவர்களுக்கு 5000 ரூபா வீதம் மருத்துவ உதவிக்கான கொடுப்பனவும் வழங்கப்பட்டதுடன் வெளிநாடு செல்லாமல்; பிரதேச செயலகத்தினால் தடுக்கப்பட்டதுடன் மூன்று பெண்கள் வீட்டில் இருந்து சுயதொழிலை மேற்கொள்வதற்காக தலா 20,000ரூபா வீதம் சுயதொழில் ஊக்குவிப்பு கொடுப்பனவும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மண்முனை மேற்கப் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டடு வழங்கிவைத்ததுடன் பி.பி.டி.ஆர்.ஓ நிறுவனத்தின் தலைவர் வ.கந்தையா,  திட்ட முகாமையாளர் அ.லவகுமாரன், கணக்காளர் ச.பரமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X