2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பாரம்பரிய உணவுகளின் கண்காட்சி

Kogilavani   / 2014 மார்ச் 18 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்ட பாரம்பரிய உணவுகளின் கண்காட்சி இம்மாதம் 21ஆம்திகதி முதல் 23ஆம் திகதி வரை மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரியில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.

மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இக் கண்காட்சியில், தமிழ், முஸ்லிம், சிங்கள, பறங்கியர் சமூகங்களின் பாரம்பரிய உணவுகள் காட்சிப்படுத்தப்படுவதுடன் விற்பனையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'இளம் தலைமுறையினருக்கு பாரம்பரிய உணவுகள் தொடர்பில் அறிவின்மை காணப்படுகிறது. மேற்கத்தேய உணவு வகைகளினைப் உற்கொள்வதனால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.

பாரம்பரிய உணவுகளைப் பயன்படுத்துவதில் உள்ள நன்மைகள், மேற்கத்தேய உணவுகளைப் பயன்படுத்துவதில் உள்ள பாதிப்புக்கள், எமது உணவுகளின் முக்கியத்துவம் என்பவற்றினைத் தெளிவுபடுத்தும் வகையில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என அவர் மேலும் தெரிவித்தார்.

இக்கண்காட்சி  எதிர்வரும்  23ஆம் திகதி வரை தினமும் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை நடைபெறவுள்ளது.

மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள மக்களின் பாரம்பரிய உணவுகளான முந்திரி வகை, எண்ணைப்பலகாரங்கள், எள்ளு, தயிர், பயத்தை உணவுகள், நெய், தொதள், சீனிப்பலகாரம், சோகி, சோளன், இலைக்கஞ்சி, பப்படம், இறுங்கு உணவுகள், தேன்குழல், தானிய வகை, வேடர்களின் உணவுகள், கருவாடு, மாசி, நண்டு என அனைத்து உணவுகளும் இங்கு கிடைக்கக் கூடியதாக இருக்கும்.

எனவே மட்டக்களப்பு மாவட்டத்தின் உணவுக்கண்காட்சி விற்பனையினை அனைத்து மக்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் மலர்ச்செல்வன் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X